3வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்... ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் பயணத்தில் பங்கேற்கிறார்

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்ணுக்கு செல்லவுள்ள பேரி யூஜின் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்ணுக்கு செல்லவுள்ள பேரி யூஜின் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான இவர், டிஸ்கவரி விண்கலம் மூலமாக இதுவரை இரண்டு முறை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணித்துள்ளார். அதிக விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட வீராங்கனை, அதிக நேரம் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டவர் என்று பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தார்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ்

கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு அவர் நாசாவில் நடைபெற்று வரும் பரிசோதனைகளில் பங்கேற்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே தற்போது விண்வெளிக்கு சென்று வர நாசா நிறுவனம் போயிங் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலத்தின் பரிசோதனை முடிவுகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மனிதர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுமந்து செல்லும் இறுதி கட்ட நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டே இதற்கான நடவடிக்கைகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாகி வந்தது.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

இந்நிலையில் வருகிற மே மாதம் 7ம் தேதி அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:34 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் பேரி யூஜின் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் பயணிக்க உள்ளனர். இதற்கான கவுண்டவுன் பணிகளை துவங்குவதற்கான நடவடிக்கைகளில் நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பயணத்தின் மூலமாக மூன்றாவது முறை விண்வெளிக்கு செல்லும் வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைக்க உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in