அமெரிக்காவில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு... இந்திய - அமெரிக்க காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்திய - அமெரிக்க காங்கிரஸின் ஸ்ரீ தனேதார்
இந்திய - அமெரிக்க காங்கிரஸின் ஸ்ரீ தனேதார்

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக இந்திய - அமெரிக்க காங்கிரஸின் ஸ்ரீ தனேதார் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சமீபகாலமாக இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அங்கு வசிக்கும் இந்திய - அமெரிக்க காங்கிரஸ்காரரும், மக்கள் பிரதிநிதியுமான ஸ்ரீ தனேதார் மற்றும் இந்திய-அமெரிக்கர்களான ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, பிரமிளா ஜெயபால் ஆகியோர் சமீபத்தில், அமெரிக்காவின் இந்து கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை கோரி அந்நாட்டு நீதித்துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அமெரிக்காவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ தனேதார் இது தொடர்பாக கூறியதாவது:

"இன்று அமெரிக்காவில் இந்து மதம் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன். ஆனால், இது தொடர்பாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களில் இதுபோன்ற கணிசமான தாக்குதல் சம்பவங்களை நாம் அனுபவித்திருக்கிறோம்.

இந்து சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஆரம்பம் இது. இப்போது ஒன்றாக நிற்க வேண்டிய நேரம் இது. கலிபோர்னியா, நியூயார்க் என அமெரிக்கா முழுவதும் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்களில் திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு சமூகமும் ஒன்றிணைந்து சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது. இதைத் தான் நாங்கள் நீதித்துறையிடமும் கோருகிறோம். இந்து மதத்துக்கு எதிரான இத்தகைய வெறுப்பை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாக வெளியாகி உள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in