
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவரது கணவன் மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கோடிலிங்கம் ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக கடலில் வலை விரித்தபோது அங்கு அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகில் வந்த மூன்று கடற்கொள்ளையர்கள் வெள்ளப்பள்ளம், அக்கரைப்பேட்டை மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மூன்று லட்சம் மதிப்புள்ள வலைகள் பறித்துக் கொண்டு மீனவர்களை கத்தியால் வெட்டினர்.
அதுமட்டுமில்லாமல் படகில் இருந்த ஜிபிஎஸ், செல்போன் உள்ளிட்ட மீன்பிடி தளவாடப் பொருட்களை கொள்ளையடித்த அவர்கள், மீனவர்களை ரப்பர் தடி, கத்தியால் தாக்கி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி இடுப்பு அரண் கயிரையும் அறுத்து எடுத்துச் சென்றனர். கை, கால்களில் காயம்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்கள் நான்கு பேரும் கரை திரும்பிய நிலையில் மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களை அறிவுறுத்தினர்.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!