இல்லறம் முதல் கின்னஸ் வரை... சாதனையாளரின் வாழ்வில் துரத்தும் துயரம்!

உறுப்பின் அளவும் ஆரோக்கிய வாழ்க்கையும்
உறுப்பின் அளவும் ஆரோக்கிய வாழ்க்கையும்
Updated on
2 min read

அதிநீளமான ஆணுறுப்புடன் வளையவரும் மெக்சிகோவை சேர்ந்த ஒரு மனிதரின் வேதனை அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண் உடல் உறுப்பின் அளவு குறித்தான கற்பிதங்களாலும், ஏக்கங்களாலும் விவாகரத்து கண்ட தம்பதியர் உண்டு. இதே காரணத்துக்காக திருமணத்தை ஒத்திப்போடுவது முதல் தற்கொலை மனப்பான்மை வரை துவளும் ஆண்களும் அதிகம். எக்காலத்திலும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பது பாலியலில் நாட்டமுள்ள இளம்வயதினரின் தேர்வாகவே நீடித்து வருகிறது. ஆனால் மருத்துவ அறிவியல் மற்றும் பாலியல் அனுபவசாலிகளின் தீர்ப்பானது அதற்கு எதிராகவே உள்ளது.

ராபர்டோ எஸ்கிவெல்
ராபர்டோ எஸ்கிவெல்

அளவில் பெரிய அவயம் எத்தனை துயரமானது என்பதற்கு வாழும் உதாரணமாக மெக்சிகோவில் வளைய வருகிறார் ராபர்டோ எஸ்கிவெல் கப்ரேரா என்ற நபர். இவரது அந்தரங்க உறுப்பின் நீளம் 48.2 செமீ; அதாவது சுமார் 19 அங்குலம். இதனை நம்பாதவர்களுக்காக தனது அவயத்தின் எக்ஸ்ரே நகலை பொதுவில் பகிர்ந்திருந்தார். உலகின் பெரும் உறுப்புக்கு சொந்தக்காரர் என்பதற்காக காட்சிப் பொருளாக மாறியிருக்கும் இவர், அதனாலேயே இயல்பு வாழ்க்கையை தொலைத்து முடங்கியும் கிடக்கிறார்.

ஆமாம். திகிலூட்டும் உறுப்பின் அளவுக்காக இவருக்கு காதலியோ, கல்யாணமோ இதுவரை கைகூடவில்லை. நெருங்கிப் பழகவும் கூட பெண்கள் அஞ்சுகிறார்கள். பொறாமை மற்றும் வெறுப்பு காரணமாக ஆண்களும் ஒதுக்கினார்கள். தனிமையில் 50 வயது வரை வாழ்க்கையை சோகத்துடன் தள்ளிய ராபர்ட்டோ, உறுப்பின் அளவு காரணமாக தான் ஒருவகையான மாற்றுத்திறனாளியாக முடங்கிப் போயிருப்பதாக நொந்துகொள்கிறார்.

வெறுப்பின் உச்சத்தில் ஆபாச படங்களில் நடிக்கவும் முயன்றார். ஆனால் ‘நாங்கள் சர்க்கஸ் படம் எடுப்பதில்லை’ என அந்த படங்களை தயாரிப்பவர்களும் ராபர்ட்டோவுக்கு கதவடைத்து விட்டார்கள். இன்னொரு பக்கம் கின்னஸ் சாதனைக்கு முயன்றார். அப்படியொரு பிரிவிலான சாதனை கின்னஸ் தொகுப்பில் இல்லை என அவர்களும் கைவிரித்து விட்டார்கள்.

முழங்கால் வரை ஊசலாடும் அவயத்தால் அவரால் தேவாலத்தில் மண்டியிட்டு வழிபாடு நடத்த முடியவில்லை. எனவே தனது விருப்பத்துக்குரிய இறை வழிபாட்டையும் ராபர்ட்டோ தொலைத்தார். அடுத்தபடியாக வயிற்று பிழைப்புக்கான வேலை தேடிச் சென்றார். மற்றவர்களுக்கு இணையாக இவர் நடமாடுவதன் விசித்திரம் காரணமாக உருப்படியான வேலையும் கிடைக்கவில்லை.

நீண்ட உறுப்புடன் பிறந்ததுக்காக வாழ்நாள் முழுதும் வேதனையையும், வலிகளையும் சுமந்தவர், 50 வயதை கடந்த பிறகே தனது துரதிருஷ்டத்தை ஏற்றுக்கொள்ளப் பழகினார். அவ்வப்போது காட்சிப்பொருளாக அவரை பார்வையிட்டு செல்லும் சிலரின் உதவியால், வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க முயன்றார். குறிப்பிட்ட வயது வரை தனக்கென பெண் துணை வேண்டும், உடல் விருப்பங்களை தீர்க்க வேண்டும் என்றெல்லாம் ஏங்கியவர், அதன் பிறகு அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தனக்கான தனிமை வாழ்க்கையை பழகிக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...


11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

டொனால்ட் டிரம்பை தோற்கடித்து நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றார்!

கோர விபத்து; அப்பளமாய் நொறுங்கிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

‘அரபிக்குத்து’ கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் ஆல்பம்!

தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in