‘சலோம்...’ ஹமாஸ் போராளிக்கு இஸ்ரேலிய பெண் பிணைக்கைதி வாழ்த்து... வீடியோ வைரல்!

ஹமாஸ் அமைப்பினருக்கு சலோம் தெரிவிக்கும் இஸ்ரேலிய பெண்மணி
ஹமாஸ் அமைப்பினருக்கு சலோம் தெரிவிக்கும் இஸ்ரேலிய பெண்மணி

ஹமாஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண் பிணையக்கைதி, ஹமாஸ் போராளிக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த தாய் - மகள் என இரட்டை பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்ததை தொடர்ந்து, மேலும் 2 பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலை சேர்ந்த அந்த 2 பெண்களும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக, காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

காசா பிராந்தியத்தின் பாலஸ்தீனர்களுக்காக போராடி வரும் ஹமாஸ் அமைப்பின் ராணுவக் குழு அல் கஸாம் சார்பில், அக்.7 அன்று இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இஸ்ரேலின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 200க்குள் மேலானோர் பிணைக்கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமன்றி, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அடங்கிய அந்த பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளை இஸ்ரேலிய ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. காசா மீதான வான்வழித் தாக்குதல்களை அடுத்து தரை மார்க்கமாகவும் இஸ்ரேல் படை நுழைய ஆயத்தமானது.

இதனிடையே கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தம் வாயிலாக, ஹமாஸ் பிடியிலிருக்கும், தாய் - மகள் என 2 அமெரிக்கப் பெண்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலை சேர்ந்த 2 பெண்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்த ஹமாஸ் போராளிகளின் கரம் பற்றி அழைத்துவரப்பட்ட பிணைக்கைதி பெண்கள் இருவரும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அப்போது பிணைக்கைதிகளில் ஒருவரான இஸ்ரேலிய பெண்மணி, ஹமாஸ் போராளியின் கரம்பற்றி ’சலோம்’ என்று தெரிவித்தார். வணக்கம், நன்றி உள்ளிட்டவைக்கு இணையாக யூதர்களின் ஹீப்ரு மொழியில் ’அமைதி’ என்பதை குறிக்க உச்சரிக்கப்படும் சொல் சலோம். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 18வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பிலிருந்து ஹமாஸ் தரப்புக்கு சென்றுள்ள ’சலோம்’ குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in