இந்தியா அனைத்து படைவீரர்களையும் திரும்பப் பெற்றுவிட்டது: மாலத்தீவு அரசு தகவல்

இந்திய படைவீரர்கள் (கோப்புப் படம்)
இந்திய படைவீரர்கள் (கோப்புப் படம்)

மாலத்தீவில் இருந்து தங்களது அனைத்து படை வீரர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் அங்கு இந்திய ராணுவ வீரர்கள் சிலர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் சீன ஆதரவாளராக அறியப்படும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, தனது நாட்டிலிருந்து இந்திய படைவீரர்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவாக மே 10ம் தேதியை நிர்ணயித்திருந்தார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இந்திய பிரதமர் மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இந்திய பிரதமர் மோடி

மாலத்தீவில் இருந்த சுமார் 90 இந்திய ராணுவ வீரர்களை, திருப்பி அனுப்புவது, முகமது முய்ஸு கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த முக்கிய உறுதிமொழியாக இருந்தது.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் மாளிகை தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத், செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்களின் கடைசி பிரிவு வெளியேறிவிட்டது" என்றார்.

எனினும், மொத்தம் எத்தனை இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்த சரியான எண்ணிக்கையை ஹீனா வலீத் தெரிவிக்கவில்லை. மாலத்தீவில் 89 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முன்பு கூறியிருந்தது.

ஹீனா வலீத்
ஹீனா வலீத்

முகமது முய்ஸு அரசின் வேண்டுகோளின் பேரில் மார்ச் 12 அன்று 25 வீரர்களைக் கொண்ட முதல் குழுவை இந்தியா தனது திரும்பப் பெற்றது.

மாலத்தீவில் மூன்று ராணுவ தளங்களை இயக்கும் இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற முகமது முயிஸு வலியுறுத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in