‘இது 1962-ம் ஆண்டு இந்தியா அல்ல என்பதால் சீனா பதற்றத்தில் நடுங்குகிறது’ மத்திய அமைச்சர் சவடால்

இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள்
இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள்

‘தற்போதைய இந்தியா 1962-ம் ஆண்டின் இந்தியா அல்ல என்பதால், சீனா பதற்றத்தில் உள்ளது’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனாவுக்கு பதிலடி தருவதோடு, காங்கிரஸ் கட்சியை பழித்தும், மோடியை புகழ்பாடியும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜீ இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லை பிராந்தியம்
இந்தியா - சீனா எல்லை பிராந்தியம்

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் திமுகவை ஒருசேர தாக்கியுள்ளார். அதே நேரம், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமிக்க முயல்வதற்கு எதிராக மவுனம் சாதிக்கிறார். இந்த சூழலின் மத்தியில் ’அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றிய சீனாவின் செயல் தீங்கிழைக்கும் செயல்’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்

அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவின் செயலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்றைய தினம் கடுமையாக சாடினார். மோடி ஆட்சிக்காலத்தில், எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எல்லைப் பகுதிகளை இந்தியா மேம்படுத்தக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்த சீனர்கள் காங்கிரஸ் அரசாங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். காங்கிரஸின் எல்லைக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைகீழாக மாற்றியுள்ளார். அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், அனைத்து 4ஜி நெட்வொர்க்குகள், நீர் விநியோகம், மின்சாரம் என சகல வசதிகளும் எல்லை நெடுக செய்து கொடுக்கப்பட்டன.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இது 1962 காலத்திய இந்தியா அல்ல என்பதால் சீனா பதற்றமடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா தானாக மற்றவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்காது; ஆனபோதும் நமக்கு வலிய தொந்தரவு தந்தால்ல் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்றும் கிரண் ரிஜிஜூ கூறினார்.

மேலும், ”காங்கிரஸ் கட்சியின் எதிர்மறையான எல்லைக் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். எனவே, தற்போது எல்லைப் பகுதிகள் நவீன வளர்ச்சியின் வெளிச்சத்தைக் கண்டு வருவதால், சீனா அதற்கு எதிர்வினையாற்றி வருகிறது. சீனா அசௌகரியமாக உணர்கிறது. எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏன் இவ்வளவு உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்புகிறார்கள். அவற்றில் ஒன்றாக பெயர் மாற்றல் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்” என்றும் கிரண் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in