அதிர்ச்சி வீடியோ... இஸ்ரேல் மீதான தாக்குதலை கொண்டாடிய இங்கிலாந்து நாட்டினர்

இஸ்ரேல் மீதான லண்டனில் கொண்டாட்டம்
இஸ்ரேல் மீதான லண்டனில் கொண்டாட்டம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து பலரையும் பிணையக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், இருதரப்பிலும் சேர்த்து 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலை, லண்டனில் சிலர் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில் ஒன்றை அந்நாட்டின் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் லண்டன் போலீஸார் உடனடியாக அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, நகரம் முழுவதும் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், அந்நாட்டின் தொலைக்காட்சித் தொகுப்பாளினியான ரேச்சல் ரெய்லே என்பவர், தான் காரில் பயணிக்கும்போது, லண்டனில் சிலர் பாலஸ்தீனிய கொடிகளுடன், கார்களில் தாளம்போட்டபடி பார்ட்டி நடத்துவதைக் கண்டு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இஸ்ரேலில் மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள். அதை லண்டனில் சிலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் வீடியோவையே இங்கிலாந்து அமைச்சர் ராபர்ட்டும் பகிர்ந்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in