டிக்டாக் எதிராக சாட்டையை சுழற்றும் இந்தோனேசியா

டிக்டாக் ஷாப்
டிக்டாக் ஷாப்

இந்தோனேசியா வகுத்துள்ள விதிகளை டிக்டாக் செயலி தொடர்ந்து மீறி வருவதால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான டிக்டாக் செயலி இந்தோனேசியாவிலும் வரவேற்பு பெற்றுள்ளது. வீடியோ செயலியான டிக்டாக் தனது செயலி வழி பரிவர்த்தனையில், இந்தோனேஷியாவில் பெரும் லாபம் சம்பாதித்து வந்தது. இதற்கு இந்தோனேஷியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது.

டிக்டாக்
டிக்டாக்

சமூக ஊடகங்கள் பயனர்களுக்கு இலவச சேவை வழங்குவதாக கூறிவிட்டு, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றன. இந்த திரைமறைவு வருமானத்துக்கு அடுத்தபடியாக நேரடி வருமானமாக ஆன்லைன் ஷாப்பிங் உத்தியையும் தங்களது செயலி வழியாகவே மேற்கொள்கின்றன. ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவை இந்த வகையில் தொடர்ந்து வருமானம் பெறுகின்றன.

இந்தோனேசியாவில் டிக்டாக் அறிமுகம் செய்த ’டிக்டாக் ஷாப்’ என்ற மின் வணிகத்துக்கான முயற்சி பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் டிக்டாக் ஷாப் வர்த்தகத்தால், நாட்டின் சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாக இந்தோனேசியா கருதியது. இதனையடுத்து டிக்டாக் ஷாப் பரிவர்த்தனைக்கு இந்தோனேஷியா தடை விதித்தது.

டிக்டாக்
டிக்டாக்

இதற்கிடையே நாட்டின் மிகப்பெரும் ஆன்லைன் விற்பனை நிறுவனமான டோகோபிடியாவின் சுமார் 75 சதவீத பங்குகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான, சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் வாங்கியது. இந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டுக்கு மாறாக டிக்டாக் தொடர்ந்து செயல்படுவதாக கூறி அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியர்களின் தனியுரிமை மற்றும் அதுசார்ந்த பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்திய அரசு டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அமித் ஷா மீதான ‘கொலைகாரர்’ அவதூறு... ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து கதவைத் திறக்க முயற்சி... வாலிபரால் பெரும் பரபரப்பு!

10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி!

இனி, ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்... 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

சிரித்த முகத்துக்கு மாற விரும்பிய மாப்பிள்ளை... உயிரைப் பறித்தது ஹைதராபாத் அறுவை சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in