அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய இந்திய வம்சாவளி மாணவி கைது!

இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன்
இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன்

அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்து, அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸில் வளர்ந்தவர் அச்சிந்தியா சிவலிங்கன். இம்மாணவி அங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்தின் காசா மீது போர்த் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான மாணவ, மாணவிகளை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

இந்திய வம்சாவளி மாணவியான அச்சிந்தியா சிவலிங்கனும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மற்றொரு மாணவர் ஹசன் சையத் என்பவரும் போராட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அச்சிந்தியா சிவலிங்கன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை 7 மணிக்கு அங்குள்ள மெக்கோஷ் முற்றத்தில் மாணவர்கள் போராட்டத்துக்கு திரண்டனர். அவர்கள் பாலஸ்தீன சார்பு ஆதரவு கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் எச்சரிக்கைக்குப் பிறகு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

கைது
கைது

மற்றவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும் அவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in