இந்தியா-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை முறியடிக்க திட்டம்... ஹமாஸ் மீது பைடன் குற்றச்சாட்டு!

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கடந்த செப்டம்பர் மாதம், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகின் பெரும் பகுதிகளை இணைக்கும் வகையிலான மெகா பொருளாதார பெரு வழித்தட திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கையெழுத்திட்டன.

சவுதி இளவரசர் முகமது, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
சவுதி இளவரசர் முகமது, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம், இந்தியா - மேற்கு ஆசியா நாடுகள்- ஐரோப்பிய நாடுகளை இணைக்க உள்ளன. இந்த திட்டத்தில் இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இணைந்துள்ளன.

இஸ்ரேல் போர்
இஸ்ரேல் போர்

இதன் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளிடையே வர்த்தக உறவு மேம்பட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதற்கு சீனா, ஈரான், கத்தார் போன்ற நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. இந்தச் சூழலில் கடந்த 7 ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இந்நிலையில், வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார பெருவழித்தட திட்டத்தை முறியடிக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பொருளாதார பெருவழித்தட திட்டத்தின் மூலம் உலக நாடுகள் வளர்ச்சி பெறுவதையும் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதையும் தீவிரவாதிகள் விரும்பவில்லை என்றார்.

கடந்த காலங்களில், இந்த திட்டம் தொடர்பாக ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா, பாலஸ்தீன நாட்டு தலைவர்களுடன் பேசியதாக கூறினார். இத்திட்டம் மூலம் இந்த பிராந்தியத்திற்கு சிறந்த எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையை, சீர்குலைக்கும் முயற்சியாகவே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in