‘மெல்லக் கொல்லும் விஷம் மூலம் என் மனைவியை கொல்ல முயற்சிக்கிறார்கள்’ சிறையிலிருக்கும் இம்ரான் கான் அலறல்

புஷ்ரா பிவி, இம்ரான் கான்
புஷ்ரா பிவி, இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தனது மனைவிக்கு மெல்லக் கொல்லும் விஷம் தரப்படுவதாக இன்றைய தினம் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், முன்னாள் பிரதமருமானவர் இம்ரான் கான் (71). இவரது மனைவி புஷ்ரா பிவி (49). இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட அடியாலா சிறையில் இம்ரான் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களின் மதிப்பை குறைத்து காட்டிய புகாரில் மனைவி புஷ்ரா பிவியுடன் இணைந்து சிக்கினார். இந்த வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், திருமண விதி மீறல் வழக்கிலும் இம்ரான் தம்பதியினர் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புஷ்ரா பிவி இஸ்லாமாபாத்தில் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். இதன் பொருட்டு இம்ரான் வீட்டு வளாகமே சப்ஜெயிலாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அங்கே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கணவர் அடைக்கப்பட்டுள்ள அடிலியா சிறைக்கே தன்னையும் மாற்ற வேண்டும் எனக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் புஷ்ரா பிவி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி இம்ரான் கானும் நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.

இதனிடையே இன்றைய தினம் நீதிமன்றத்தில் முறையிட்ட இம்ரான் கான், தனது மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டு வருவதாக புகார் கூறியிருக்கிறார். தனது மனைவிக்கு எதிரான கொலை முயற்சிக்கு ராணுவத் தளபதியான ஜெனரல் அசிம் முனீர் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மனைவிக்கு விஷம் கொடுத்ததன் பக்கவிளைவுகள், தோல் மற்றும் நாக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இம்ரான் தெரிவித்துள்ளார். மனைவி புஷ்ரா பிவியை ஷௌகத் கான் மருத்துவமனையின் டாக்டர் அசிம் மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறும், அரசு தரப்பு மருத்துவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

புஷ்ரா பிவி
புஷ்ரா பிவி

இம்ரான் கான் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது வேண்டுகோளை விவரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே புஷ்ரா பிவியை அமெரிக்க ஏஜெண்ட் என புதிய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இதன் மூலம் சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு கூடுதல் நெருக்கடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இம்ரான் மனைவி புஷ்ரா பிவி குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு விஷப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்க்கப்படுவதாகவும், இதனால் மார்பு மற்றும் வயிற்று வலியுடன், கண்கள் வீக்கமுற்று, உணவும் தண்ணீரும் கசப்படைந்து போயிருக்கின்றன என்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புஷ்ரா புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in