குட்நியூஸ்... இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

குட்நியூஸ்... இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

இந்தியாவிலிருந்து இருந்து வருவோருக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை சோதனை முயற்சியாக மார்ச் 31 வரை அமல்படுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது தேவை. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம். அந்த நாட்டுக்கு சென்ற பிறகு கூட அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். அப்படி எளிமையான விசா அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் இருக்கின்றன. அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம்.

இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தில் உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா தேவையில்லை எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in