கனமழை... கதறும் மக்கள்... வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி! மொத்த நகரும் மூழ்கியது!

ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. நிலநடுக்கம், கனமழை, கடும்பனி உள்ளிட்டவற்றால் இந்த நாடு அடிக்கடி இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இம்மாத துவக்கத்திலிருந்து அங்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்தது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கும் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஃபாரா, ஹீரத், ஜாபூல், கந்தஹார் ஆகிய மாகாணங்களில் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

ஃபாரா, ஹீரத், ஜாபூல், கந்தஹார் மாகாணங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன
ஃபாரா, ஹீரத், ஜாபூல், கந்தஹார் மாகாணங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன

3 நாட்களாக ஏற்பட்டுள்ள பேரிடரில் இதுவரை 33 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 22,000 குடும்பங்களுக்கு உடனடியாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாரா நகர் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி, நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்நகரில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

வரவிருக்கும் அடுத்த சில நாட்களில் பனிப்பொழிவும், மழையும் நீடிக்கும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொது மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in