இந்திய ராணுவத்தின் முதல் அணி மார்ச் 10-க்குள் வெளியேறும்... மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அதிபர் உறுதி

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் மோடி

மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தின் முதல் அணி மார்ச் 10க்குள் நாட்டை விட்டு வெளியேறும் என அதிபர் முகமது முய்ஸு தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் முதல் அணி மார்ச் 10-க்குள்அங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள இந்திய ராணுவத்தினர் மே 10-க்குள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இன்று உறுதி தெரிவித்தார். இதன் மூலம் தனது இந்திய எதிர்ப்பு நிலையை மற்றுமொரு முறை அவர் உறுதி செய்துள்ளார். இந்த உறுதியை அவர் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அறிவித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு

மாலத்தீவின் இந்திய ஆதரவு ஆட்சியாளர் அகற்றப்பட்டு, சீன ஆதரவிலான அரசியல் தலைமை ஆட்சியை பிடித்துள்ளது. அவர்களுக்குத் தலைமை தாங்கும் அதிபர் முகமது முய்ஸு, தேர்தலுக்கு முன்பிருந்தே தனது இந்திய எதிர்ப்பு நிலையை பகிரங்கப்படுத்தி வந்தார். அதன்படியே ஆட்சியை பிடித்ததும், இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் பல்வேறு முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். அதிபரின் முடிவை அவரது அமைச்சர்கள் மூவர் பின்பற்றியதில், இந்திய பிரதமருக்கு எதிரான இழிவான பதிவுகள் பொதுவெளியில் வெளியாகின. அவை இந்தியா - மாலத்தீவு இடையிலான சுமூகத்தை மேலும் சரியச் செய்துடன், இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா அபிமானத்தை துறக்கவும் காரணமானது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு வெளிப்படையாக முன்வைத்த இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளில் ஒன்றாக, மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தின் சிறிய அணியை அங்கிருந்து வெளியேற்றுவதும் அடங்கும். அதற்கான காலக்கெடுவையும் விதித்து அவ்வப்போது முகமது முய்ஸு இந்தியாவை நெருக்கி வருகிறார். அதன் அங்கமாக, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தனது முதல் உரையிலும் அதனை எதிரொலித்தார். “வெளிநாட்டு ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற்றுவதன் மூலம், தேசம் தனது இறையாண்மை மற்றும் கடல் ஆள்கையை மீட்டெடுக்கும் என்பதால், எனது முடிவுக்கு மாலத்தீவு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்” என்று நம்பிக்கை பகிர்ந்தார்.

மாலத்தீவு
மாலத்தீவு

நவம்பர் 17 அன்று மாலத்தீவின் அதிபராக முய்ஸு பதவியேற்றது முதலே, மாலத்தீவில் இருக்கும் 88 ராணுவ வீரர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகிறார். அவரின் நிலைப்பாடுக்கு மாலத்தீவு மக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவி வருகிறது. மாலத்தீவு - இந்தியா பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், மாலத்தீவுக்கான மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளுக்காகவும் இந்திய ராணுவத்தின் சிறிய அணி அங்கே நிலைகொண்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு, எதிரிகளின் உளவு மற்றும் ஊடுருவல்களை கண்காணிக்கவும், தடுக்கவும் இந்த ராணுவக்குழு கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in