எலான் மஸ்கின் அடுத்த அதிரடி... ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்!

எக்ஸ் மெயில்
எக்ஸ் மெயில்

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கூகுளின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயிலை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் வைத்திருக்கும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் பாதுகாப்பு பொறியியல் குழுவின் மூத்த உறுப்பினர் நாதன் மெக்ராடி. இவர், எக்ஸ் மெயிலின் வெளியீட்டு தேதி குறித்து எலான் மஸ்க்கிடம் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், எக்ஸ் மெயில் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு ஜிமெயில் மட்டுமின்றி இதர மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனத்தினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இருப்பினும் எக்ஸ் மெயில் சேவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து மஸ்க் எதுவும் தெரிவிக்கவில்லை. ‘அது வந்து கொண்டிருக்கிறது' என்ற பதிலை மட்டுமே அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய மெயில் சேவையையும் எக்ஸ் என்ற எழுத்தை பிரதானமாக கொண்டே உருவாக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். ஆனால் தற்சமயம் எக்ஸ் எழுத்தை ஏற்கெனவே 3 இதர நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இருப்பினும் தனது அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் எக்ஸ் என்ற எழுத்தை தவறாது இடம்பெறச் செய்திருக்கும் மஸ்க், எக்ஸ் மெயில் உரிமையை பெரும் அளவுக்கு பண பலத்தை கொண்டுள்ளார்.

மெயில் சேவை தவிர ஆன்லைன் பணம் செலுத்தும் சேவை, வீடியோ அழைப்புகள் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப சேவையை அறிமுகப்படுத்தும் பணிகளில் மஸ்க் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதி ஜிமெயில் ஹெச்டிஎம்எல் இயங்குதளம் சேவையை மூடுவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வைரலாகி வரும் நிலையில் எலான் மஸ்க், எக்ஸ் மெயில் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். எக்ஸ் மெயில் அறிவிப்பு வெளியானது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ள பதிலில், “ஜிமெயில் இங்கே உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும்... கனிமொழி எம்.பி., பேச்சு!

24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... நடிகைக்கு பரிசாக வழங்கிய பிரபல பாடகர்!

கொடூரம்... 2 வயது குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்!

ஓடும் ரயிலில் குத்தாட்டம்... இளசுகளின் ரீல்ஸ் மோகத்துக்கு எதிராக ரயில்வே மீண்டும் எச்சரிக்கை

கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ரேபிஸ்ட்டுக்கு பரோல்... கொந்தளித்த பாடகி சின்மயி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in