குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார் டொனால்ட் டிரம்ப்... 1,241 வாக்குகளை பெற்று அசத்தல்!

3வது முறையாக அதிபர் வேட்பாளராக தேர்வானார் டொனால்ட் டிரம்ப்
3வது முறையாக அதிபர் வேட்பாளராக தேர்வானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,241 வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் 3-வது முறையாக அவர் குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ளார். இதையடுத்து குடியரசுக் கட்சியில் உத்தேச வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்புகள் சமீப காலமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 6 வேட்பாளர்கள் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக, களம் இறங்கினர். இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே மற்றும் கிறிஸ் கிறிஸ்டி, அசா ஹட்சின்சன், ரான் டி சாண்டிஸ் ஆகியோருடன் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து மொத்தம் 1,215 பிரதிநிதிகளின் வாக்குகளை பெறும் உத்தேச வேட்பாளரே அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் இந்த வாக்கெடுப்பு துவங்கியதில் இருந்தே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால் விலகிக் கொண்டனர். இந்த நிலையில் இறுதியாக கடந்த மார்ச் 6-ம் தேதி நிக்கி ஹாலே 94 வாக்குகள் மட்டும் பெற்று இருந்ததால் அவரும் அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன்

இதனால் டொனால்ட் டிரம்ப்-பைடன் இடையேயான போட்டி கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. இருப்பினும் 1,215 வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே டிரம்ப் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதால் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளொயாவதில் தாமதமானது. இந்த நிலையில், இன்று அடுத்தடுத்து மூன்று மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 1,241 வாக்குகளை பெற்று இந்த தேர்வில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அதிகாரபூர்வமாக அவர் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் களமிறங்குவது இது மூன்றாவது முறையாகும். முதல் முறை களமிறங்கிய போது அதிபராக வெற்றி பெற்றவர், அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்து வெளியேறினார். இருப்பினும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த அவர், 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது அவர் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?

திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in