இந்தியாவிற்கான புதிய தூதரை நியமித்தது சீனா... ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவிப்பு!

ஜூ பெய்காங்
ஜூ பெய்காங்

இந்தியாவுக்கான புதிய தூதராக ஜூ பெய்காங் என்பவரை சீன அதிபர் ஜி ஜின்பிங் நியமித்துள்ளார். 18 மாதங்களுக்குப் பிறகு புதிய தூதரை சீன அரசாங்கம் நியமனம் செய்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது பிரச்சினை வெடித்து வருகிறது. இதனால் இருநாட்டு உறவில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா சீனா
இந்தியா சீனா

இந்த சூழலில், இந்தியாவிற்கான சீன தூதராக பதவி வகித்து வந்த சுன் வெயிடங்கின் பதவிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. தற்போது அவர் சீன நாட்டின் வெளியுறவு இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கான புதிய தூதர் யாரையும் அந்நாட்டு அரசு நியமிக்கவில்லை.

இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இந்தியாவுக்கான சீன தூதரை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நியமனத்தை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

தற்போது இந்தியாவுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்டுள்ள ஜூ பெய்காங், முன்னதாக ஆப்கானிஸ்தான், ருமேனியா போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றியுள்ளார். 60 வயதாகும் இவர் விரைவில் இந்தியா வந்து பதவி ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in