விலகுகிறார் நிக்கி ஹாலே?... அதிபர் தேர்தலில் பைடன்-டிரம்ப் இடையேதான் போட்டி!

குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே
குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அதிபர் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே அதிபர் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் இவ்வாண்டு நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். உட்கட்சியில் அவருக்கு தேவையான அளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதால், அவர் அதிபர் தேர்தலில் நிற்பது உறுதியாகியுள்ளது. அதே சமயம் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவரும், தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் ஆளுநருமான நிக்கி ஹாலே அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இதுவரை நடைபெற்றுள்ள போட்டியில் இவர்களுக்கு எதிராக களமிறங்கிய ரான் டி சாண்டிஸ், விவேக் ராமசாமி, அசா ஹட்சின்சன், கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 4 பேரும் விலகி உள்ளனர். இதனால் அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான 1,215 வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் வேட்பாளராக களமிறங்குவார். அந்த வகையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு இதுவரை 995 பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிடும் நிக்கி ஹாலேக்கு இதுவரை 89 பிரதிநிதிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே
குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. டொனால்ட் டிரம்பிற்கு, கட்சிக்குள் ஆதரவு பெருகி வரும் நிலையில், போட்டியிலிருந்து விலக நிக்கி ஹாலே முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் அதிபர் பைடன் மற்றும் டிரம்ப் இடையே நேரடி போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்றேறக்குறைய உறுதியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in