பகீர்... உலகம் முழுவதும் வெப்ப அலைகளால் ஆண்டுக்கு 1.53 லட்சம் பேர் உயிரிழப்பு: இந்தியாவில் எத்தனை பேர் தெரியுமா?

வெப்ப அலை
வெப்ப அலை

உலகம் முழுவதும் வெப்ப அலையால் ஆண்டுக்கு 1.53 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம், உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை
இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை

இதில் இந்தியா மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் வெப்ப சலனம் காரணமாக ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் உயிரிழப்பது ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கப்ட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 1.53 லட்சம் இறப்புகளில், இந்தியாவில் அது 20 சதவீதமாக உள்ளது. வெப்ப சலன இறப்புகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் உயிரிழப்பு 14 சதவீதம், ரஷ்யாவில் 8 சதவீதமாக உள்ளன.

இந்த ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 1.53 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் ஆசியாவில் இறப்பதாக மோனாஷ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 30 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.

வெப்ப அலையின் உக்கிரத்தை எதிர்கொள்ளும் நபர்
வெப்ப அலையின் உக்கிரத்தை எதிர்கொள்ளும் நபர்

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மில்லியன் மக்களில் 236 பேர் வெப்ப அலையால் இறக்கின்றனர். ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மல்டி-கன்ட்ரி மல்டி-சிட்டி (எம்.சி.சி) ஆராய்ச்சி நெட்வொர்க்கிலிருந்து தரவைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதில் 43 நாடுகளில் 750 இடங்களில் தினசரி இறப்புகள் பற்றிய ஆய்வும் அடங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in