‘நான் விஸ்கியின் ரசிகன்...’ உச்ச நீதிமன்றத்தை கலகலக்க வைத்த ஆல்கஹால் விவாதம்

மதுபானம்
மதுபானம்

ஆல்கஹால் உற்பத்தியில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரங்களை அலசும் வழக்கு விவாதம் ஒன்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த வழக்கறிஞர் இடையிலான சுவாரசியப் பகிர்வு நீதிமன்ற வளாகத்தை கலகலக்கச் செய்துள்ளது.

நாட்டின் தலையாய பிரச்சினைகளை சதா விவாதிப்பதால் உச்ச நீதிமன்ற வளாகம் எப்போதும் உச்சக்கட்ட பதற்றத்துடனே செயல்படும். விவாதங்களில் அனல் பறக்கும்; தீர்ப்புகள் தேசத்தையே உலுக்கும். இவற்றுக்கு மத்தியில் எப்போதேனும் கலகலப்புக்கும் வாய்ப்பு அமைவதுண்டு.

அப்படியான விவாத சூழல் உச்ச நீதிமன்ற வழக்கொன்றில் நேற்றைய தினம் அமைந்தது. இந்த வகையில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி ஆகியோர், வழக்கு விசாரணையின் இடையே, உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான இறுக்கத்தை உடைக்கும் சுவாரசிய தருணத்தை பகிர்ந்து கொண்டனர்.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் தொழிற்சாலை மதுபானம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. சந்தைகளில் கிடைக்கும் உண்ணக்கூடிய ஆல்கஹால் மற்றும் தொழில்துறை ஆல்கஹால் உற்பத்தியில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள மேலாதிக்க அதிகாரங்கள் ஆகியவற்றை நீதிபதிகள் அமர்வு ஆலோசித்தது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் த்விவேதி, அனைத்து வகையான மதுபானங்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று வாதிட்டார். மதுபான தொடர்பான விவாதம் என்பதால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் விவாதத்திலும் மதுபானம் குறித்தான விசாரிப்பு இயல்பாக அமைந்துப் போனது.

வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே வழக்கறிஞர் த்விவேதி, நகைச்சுவையுடனே ஆரம்பித்தார். வண்ணமயமான தனது தலைமுடியை சுட்டிக்காட்டிய அவர், ஹோலி பண்டிகை காரணமாக அவ்வாறாகிவிட்டதாக விளக்கினார். "என்னுடைய கலர்ஃபுல் தலையுடன் வழக்கு விசாரணைக்கு வந்ததற்கு மன்னிக்கவும். இதற்கு ஹோலி பண்டிகைதான் காரணம். பேரக்குழந்தைகள் சூழ வாழ்கிறேன். அவர்களால் எழுந்த பாதகத்திலிருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை” என சிரித்தபடி விளக்கினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், தன் பங்குக்கு நகைச்சுவையைக் கூட்டினார். "இதற்கும் ஆல்கஹாலுக்கும் சம்பந்தமே இல்லையா?" என்று கேலியாக விசாரித்தார். ஆல்கஹால் தொடபான விவாதம் என்பதால், நீதிமன்றத்தின் இதர நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களும், வளாகத்தில் எழுந்த சிரிப்பலையில் சேர்ந்து கொண்டனர்.

வழக்கறிஞர் த்விவேதியும் விடவில்லை. நீதிமன்றத்தில் உண்மையை மட்டுமே பேசும் அரிதான வழக்கறிஞராக இருப்பார் போலும். சிரித்தபடியே தலைமை நீதிபதியின் கேள்விக்கு தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார். "அதுவும் உண்மைதான். ஹோலி பண்டிகை என்பதால் கொஞ்சம் மதுபானமும் சேர்ந்து கொண்டது. இதில் இன்னொன்றையும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நானொரு விஸ்கியின் ரசிகன்" என்ற நீதிமன்றத்தின் நகைச்சுவை தருணத்தை மேலும் நீட்டித்தார்.

அவரது தலையைப்போலவே நீதிமன்ற வளாகமும் சற்றும் நேரம் வண்ணமயமாக மாறியது. சிறிய இடைவெளிக்குப் பின்னரே மதுபான வழக்கு விசாரணைக்குத் திரும்பியது.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in