உ.பி மதர்சா சட்டம் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

உ.பி மதர்சாக்களில் ஒன்று
உ.பி மதர்சாக்களில் ஒன்று
Updated on
2 min read

‘உத்தரப்பிரதேச மதர்சா கல்வி வாரியச் சட்டம்- 2004’ என்பதை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.

'உத்தரபிரதேச அரசின் மதர்சா கல்வி வாரிய சட்டம் 2004' என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று, அந்த சட்டம் மீதான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தடைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதர்சா வாரியம் அமைப்பது என்பது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறக்கூடியது என, உயர் நீதிமன்றம் கண்டு சொல்லியிருப்பது சரியாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்

கடந்த மாதம், மதர்சா வாரியத்தின் தற்போதைய மாணவர்களை முறையான பள்ளிக்கல்வி முறையில் இடமளிக்குமாறு உ.பி அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் இந்த இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மதர்சா கல்விச் சட்டம் என்பது 2004-ல் இயற்றப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதர்சா கல்வியை ஒழுங்குபடுத்துவதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. மதர்சாக்கள் அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவம் உள்ளிட்டவற்றை மாணவப் பருவத்தினருக்கு கற்பிப்பதை இலக்காகக் கொண்டது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 25,000 மதர்சாக்கள் உள்ளன, அவற்றில் 16,500 உத்தரபிரதேச மதர்சா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் 560 மதரசாக்கள் அரசிடமிருந்து மானியம் பெறுகின்றன. இது தவிர, மாநிலத்தின் 8,500 அங்கீகரிக்கப்படாத மதரசாக்கள் தனியாக செயல்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இத்தகைய உத்தரபிரதேச மதர்சா கல்வி வாரிய சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதே தற்போது உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வரை சென்றிருக்கிறது. அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாகக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்ற அந்த சட்டத்தை ரத்து செய்த உத்தரவு தற்போது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படுள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது முதலே மதர்சாக்காள் மீது தனி கவனம் செலுத்தியது. மதரசாக்கள் முறையாக அனுமதி மற்றும் பதிவு செய்வது தொடர்பாக மாநில அரசு உத்தரவிட்டது. மதர்சாக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி தொடர்பாக கேள்விகள் எழுப்பியது. மாநில அரசின் போக்கை எதிரொலிக்கும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அநேக தீர்ப்புகள் அமைந்துள்ளதாக விமர்சனத்துக்கு ஆளாகின. அந்த வரிசையில் மதர்சா சட்டமும் சர்ச்சைக்கு ஆளானதோடு, உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றாதால் அந்த ரத்துக்குக்கு இடைக்காலத் தடை விழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in