குட்நியூஸ்... ஜேஇஇ முதன்மை தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு!

குட்நியூஸ்... ஜேஇஇ முதன்மை தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு!

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி தேசிய தேர்வு முகமையால் ஜேஇஇ முதன்மை தேர்வு 2024 ஏப்ரல் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இந்தியாவில் 319 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 22 நகரங்களிலும் நடைபெற்றது.

இந்த கூட்டு நுழைவுத் தேர்வில் சுமார் 12.57 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் பங்கேற்றவர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ-ன் அதிகாரப்பூர்வ வலைதளமான jeemain.nta.ac.in மூலம் முடிவுகளைப் பார்க்கலாம்.

ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் இரண்டு பெண்கள் உட்பட 56 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 43 ஆக இருந்ததில் இருந்து கணிசமாக உயர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in