கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா... அலைமோதும் பக்தர்களின் கூட்டம்... சபரிமலை செல்பவர்கள் அலர்ட்!

சபரிமலை
சபரிமலை

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ளதால்  சபரிமலை செல்லும் பக்தர்கள்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிரம்பி வழியும் சபரிமலை
நிரம்பி வழியும் சபரிமலை

சில கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பரவல்  வேகம் எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக கேரளாவில் தினசரி பாதிப்பு 10 ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள சுகாதாரத்துறையின் தரவுகளின்படி கடந்த திங்கட்கிழமை மட்டும் 11,700 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததில், 170 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இது சபரிமலை சீசன் என்பதால் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது.

சபரிமலைக்கு நாளொன்றுக்கு  1.20 லட்சம் பேர் தரிசனத்துக்காக சென்று கொண்டிருப்பதால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.  பம்பை தொடங்கி எரிமேலி, சரங்குத்தி என்று எல்லா இடங்களிலும் பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கெல்லாம் மூச்சு கூட விட முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இதனால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும் என்று அஞ்சப்படுகிறது. கேரள மாநில காவல் துறையும், கோயில் நிர்வாகமும் பக்தர்களின்  கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் கொரோனா  பரவலை தடுக்க அங்கு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் வசதிகளும் இல்லை.

எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் தற்காப்பு முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்!

கனிமொழி, ஜோதிமணி உள்பட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

கதறிய தொண்டர்கள்... வீல் சேரில் வந்த விஜயகாந்த்!

பகீர்  வீடியோ... பேருந்தை முந்த முயன்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

பிகினி உடையில் ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in