மக்களவையில் அமளி; கனிமொழி, ஜோதிமணி உள்பட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 11-ம் நாளாக அவை கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் நேற்று கலர் புகைக்குண்டுகள் வீசியதால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஜோதிமணி எம்.பி.,
ஜோதிமணி எம்.பி.,

இதையடுத்து நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது நாடாளுமன்றம் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் உள்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவை நடவடிக்கையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இதையும் வாசிக்கலாமே...

பிரபல நகைச்சுவை நடிகர் கடத்திக் கொலை!

கடும் பனிப்பொழிவு... சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

அதிர்ச்சி...புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்!

'அவளுடன் விஷம் குடித்து விட்டேன் அம்மா';போனில் கதறிய மகன்: காதலர்கள் பலியான சோகம்!

தனி அறையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in