திருப்பதி வைகுண்ட ஏகாதசி - 20 நிமிடங்களில் ரூ.6.75 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 300 ரூபாய் தரிசன டிக்கெட் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன.

டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திருப்பதி
திருப்பதி

எனவே சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் 10 நாட்களும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபாடு செய்வர். இதற்காக சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் டிக்கெட்டைகளை நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் என்று எண்ணிக்கையில் தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது.

திருமலை திருப்பதி தங்கத்தேரோட்டம்
திருமலை திருப்பதி தங்கத்தேரோட்டம்

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வெளியான டிக்கெட்கள் 20 நிமிடத்தில் 10 நாட்களுக்கும் சேர்த்து 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதனால் தேவஸ்தானத்திற்கு இன்று 20 நிமிடத்தில் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in