சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு... வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!

சிதம்பரம் கோயில்
சிதம்பரம் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விஷ்ணு கோவிலில் மே 24 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், '400 ஆண்டுளுக்கு இந்த கோயிலில் பிரம்மோற்சவம் ஏதும் நடத்தப்படவில்லை. இதுவரை இல்லாத நடைமுறையை புதிதாக செயல்படுத்துகின்றனர். நடராஜர் தான் பிரதான தெய்வம் என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது' என வாதிடப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கு, அறநிலைய துறை தரப்பில், 'பக்தர்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in