இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானத்தின் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்
Updated on
2 min read

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் இரும்பு, சிமென்ட், சுண்ணாம்பு சாந்து போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையின் கலவையாகும். இது பல நூற்றாண்டுகள் நீடிக்கும் கட்டுமானத்துக்கான அறிவியலை உள்ளடக்கியது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா இதுபற்றி கூறுகையில், "இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்.
அயோத்தி ராமர் கோயில்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், அயோத்தி ராமர் கோயில் சிறந்த சின்னமாக திகழ்வதற்கு இந்திய விஞ்ஞானிகளும் பங்களித்துள்ளனர். இஸ்ரோ தொழில்நுட்பங்களும் கோயிலில் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர். இதில் கட்டமைக்கப்பட்ட பரப்பளவு சுமார் 57,000 சதுர அடி. இது மூன்று மாடிகள் கொண்ட கட்டமைப்பாக உள்ளது. இரும்பின் ஆயுட்காலம் 80-90 ஆண்டுகள் மட்டுமே. எனவே, கோயிலில் இரும்போ, எஃகு-வோ பயன்படுத்தப்படவில்லை. கோயிலின் உயரம் 161 அடி. இது குதுப் மினாரின் உயரத்தில் 70 சதவீதமாகும்” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் 'நாகர் ஷைலி' அல்லது வட இந்திய கோயில் கட்டிடக்கலைகளின்படி சந்திரகாந்த் சோம்புராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பம் 15 தலைமுறைகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கோயில் கட்டிடங்களை வடிவமைத்து வருகிறது. இந்தக் குடும்பம் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் 3-டி வடிவமைப்பு.
அயோத்தி ராமர் கோயில் 3-டி வடிவமைப்பு.

இதுகுறித்து சந்திரகாந்த் சோம்புராவ் கூறுகையில், “கட்டிடக்கலையின் வரலாற்றில், இந்தியாவில் மட்டுமல்ல; பூமியில் எந்த இடத்திலும் இதுவரை காணப்படாத அரிய, தனித்துவமான அற்புதமான படைப்பாக ஸ்ரீ ராமர் கோயில் இருக்கும்” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் வரைபடம்.
அயோத்தி ராமர் கோயில் வரைபடம்.

ராமர் கோயில் கட்டுமான திட்டப் பணியில் ஈடுபட்ட ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார் ராமன்சர்லா கூறுகையில், “மிகச் சிறந்த தரமான கிரானைட், மணல் மற்றும் பளிங்கு ஆகியவை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இணப்புகளில் சிமென்ட், சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்படவில்லை.

பிரத்யேக முறையான 'பூட்டு', ‘சாவி' அடிப்படையிலான பொறியியல் முறையில் கற்கள் இணைக்கப்பட்டு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 2, 500 ஆண்டுகள் வரை, நிலநடுக்கத்தை கூட எதிர்த்து நிற்கும் வகையில் இக்கோயில் 3 மாடி கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் குறித்த அரிய தகவல்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. எனவே, இக்கோயில் 21-ம் நூற்றாண்டுக் கட்டிடக் கலையின் அடையாளமாக திகழும் என கட்டிட கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in