கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மார்ச் 8ல் உள்ளூர் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகிற மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் விரதம் இருந்து அன்றைய தினம் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துவர். அந்த வகையில் வருகிற 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி
மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’வரும் 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 23ம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி
மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி

இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவானி முடிச்சட்டம் 10081ன் படி அறிவிக்கப்படவில்லை. இதனால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in