இன்றே ரம்ஜான் கொண்டாட்டம்... ஜாக் பிரிவினர் சிறப்புத் தொழுகை!

ஜாக் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை
ஜாக் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில், கோவையில் நடைபெற்ற ரம்ஜான் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, நாளை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளனர். இருப்பினும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டியினருக்கு நேற்றே பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்தனர்.

ஜாக் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை
ஜாக் கமிட்டி சார்பில் கோவையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை

அதன்படி கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

இஸ்லாமியர்களிடம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பு
இஸ்லாமியர்களிடம் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பு

கோவையில் நடைபெற்ற சிறப்பு ரம்ஜான் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நாளை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களிடம் பொள்ளாச்சி aதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு
இஸ்லாமியர்களிடம் பொள்ளாச்சி aதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

இதனிடையே தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம், பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வாக்குச் சேகரித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in