தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சி; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்!

மயிலாடுதுறை ஞானபுரீஸ்வர் ஆலயத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்காக கொடியேற்றும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை ஞானபுரீஸ்வர் ஆலயத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்காக கொடியேற்றும் நிகழ்ச்சி

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் இன்று துவங்கிய நிலையில், வரும் 30ம் தேதி முக்கிய நிகழ்வான பட்டின பிரவேசம் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில், பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதினத்தை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

இதற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்துக்கு எழுந்தருளினர். அங்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியம் முழங்க, ஆலய கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 6ம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம், காவிரியில் தீர்த்தவாரி, ஆகியவை பத்து நாள் உற்சவத்தில் நடைபெறுகிறது. மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. விழா நிறைவாக 30ம் தேதி ஆதீன மடாதிபதி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின் போது மனிதனை மனிதன் சுமப்பதா என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு தடை செய்ததை தொடர்ந்து, பக்தர்கள் எதிர்ப்பை அடுத்து மீண்டும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in