உடல் முழுவதும் சேறு... தலையில் சூடிய கோழி இறக்கை... சிவகங்கை அருகே பக்தர்களின் விநோத திருவிழா!

சிங்கம்புணரி அருகே விநோத திருவிழா
சிங்கம்புணரி அருகே விநோத திருவிழா

சிவகங்கை அருகே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு, கோழி இறக்கையை தலையில் வைத்து, பொங்கல் வைத்து வழிபடும் விநோத திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கிராமப்புற கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் வித்தியாசமான பழக்கவழக்கங்களும், விநோத வழிபாடுகளும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் பொன்னழகி அம்மன் கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதில் கீழக்குறிச்சிபட்டி, செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவன்பட்டி, கருப்புக்குடி,கொள்ளுப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

உடல் முழுவதும் சேறு பூசி வழிபாடு நடத்திய பக்தர்கள்
உடல் முழுவதும் சேறு பூசி வழிபாடு நடத்திய பக்தர்கள்

இவ்வாண்டு பங்குனி திருவிழாவை ஒட்டி பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டு பொங்கல் வைத்து, தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சேறு பூசும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் அருகே உள்ள கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக்கொண்டனர். தொடர்ந்து மாலை அணிந்து தலையில் கோழி இறகை வைத்துக் கொண்டு சாமி ஆட்டத்துடன் அம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

பொன்னழகி அம்மன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு மக்கள் வழிபாடு
பொன்னழகி அம்மன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு மக்கள் வழிபாடு

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழிபட்டால் உடல் ஆரோக்கியம் கிடைப்பதுடன், இப்பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் குடும்ப உறவுகள் மேம்படவும், நினைத்த காரியங்கள் கைகூடவும் இந்த திருவிழா உதவுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். விநோதமாக இருந்தாலும் பாரம்பரியமாக இந்த திருவிழாவை கொண்டாடி வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in