கோயில் திருவிழாவில் முதல்மரியாதை யாருக்கு? மோதிக்கொண்ட திமுக, அதிமுக நிர்வாகிகள்

சேலம் அருகே கோயிலில் முதல் மரியாதை தருவது தொடர்பாக அதிமுக, திமுகவினர் வாக்குவாதம்
சேலம் அருகே கோயிலில் முதல் மரியாதை தருவது தொடர்பாக அதிமுக, திமுகவினர் வாக்குவாதம்

சேலம் அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவத்தின் போது, முதல் மரியாதை யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மணமேடை அமைக்கப்பட்டு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தேவகிரி அம்மனுக்கு மலர் அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சேலம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
சேலம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு யாக பூஜைகள் நடத்தப்பட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாலிசரடு மற்றும் மஞ்சள், கும்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதால், தீராத நாள்பட்ட நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு கோயில் நிர்வாக குழு பொறுப்பாளர் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுகவை சேர்ந்த ஒருவர் எழுந்து நின்று, கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கும் சூழல் ஏற்பட்டதால் காவல்துறையினர் உடனடியாக இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதன் காரணமாக பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதையும் வாசிக்கலாமே...


மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in