பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கடத்தல்!

பெண் கடத்தல்
பெண் கடத்தல்

கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி எம்பி-யும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதி எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் கடத்தப்பட்டதாக அந்தப் பெண்ணின் 20 வயது மகன் மைசூரு மாவட்டம், கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், 'பிரஜ்வலின் தந்தையும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏ-வுமான எச்.டி. ரேவண்ணா அறிவுறுத்தலின்பேரில் சதீஷ் பாபண்ணா என்பவர் தனது தாயை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எச்.டி.ரேவண்ணா மனைவி பவானி ரேவண்ணா எனது தாயை அழைத்து வருமாறு முதலில் கூறி அழைத்துள்ளார். பின்னர் எனது தாய் செல்ல மறுத்ததால் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். ஹோலனார்சிப்பூரில் உள்ள எச். டி. ரேவண்ணாவின் வீட்டிலும், அவர்களின் பண்ணையிலும் எனது தாய் 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து நின்றுவிட்டார். பின்னர் வேறு இடத்தில் வேலைக்கு சென்று வந்தார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் வீடியோவில் எனது தாயும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இச்சூழலில் சதீஷ் பாபண்ணா எனது தாயை கடத்திச் சென்றுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின்பேரில் எச்.டி.ரேவண்ணா மீது போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கடத்தப்பட்ட பெண்ணை தேடும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in