நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

சினேகன்- கன்னிகா
சினேகன்- கன்னிகா
Updated on
2 min read

“அக்கா... இந்த விலையை எல்லாம் பார்க்க மட்டும் தான் முடியும். யாரும் வாங்க மாட்டாங்க... விலையை உங்க ரேஞ்சுக்கு வைக்காதீங்க” என்று பாடலாசிரியர் சினேகன் மனைவி துவங்கியிருக்கும் புது ஹேர் ஆயில் குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

தனது மனைவி கனிகாவோடு சேர்ந்து, ’சினேகம் ஹெர்ப்ஸ்’ எனும் பெயரில் புது ஹேர் ஆயில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் சினேகன். இதன் விலையைப் பார்த்த ரசிகர்கள், ‘இதெல்லாம் வாங்குகிற விலையிலா இருக்கு?’ என்றும், ’இந்த விலை வைத்தால் யாருமே வாங்க மாட்டாங்க.. ”, “நயன்தாரா, சமந்தா கூட இவ்வளவு அதிக விலை வைக்கவில்லை” என்றும் தங்கள் அதிருப்தியை கமெண்ட்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாடலாசிரியர் சிநேகனைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், நடிப்பதைக் குறைத்துக் கொண்ட நடிகை கன்னிகா, தற்போது பிசினஸ் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். சினேகன் - கன்னிகா இருவரும் இணைந்து ’சினேகம் ஹெர்ப்ஸ்’ என்ற ஹேர் ஆயில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இயற்கை முறையில் தங்கள் தயாரிப்பு இருக்கும் என்றும் சொல்லி இதை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, 200ml அளவிலான ஹேர் ஆயில் விலையே ரூ.999 என்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ‘எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் வாங்கும்படியாக விலையை குறைத்துக் கொடுங்கள்’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

நடிகைகள் நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் நடிப்பதோடு தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இவர்களது வழியில் இப்போது நடிகை கன்னிகாவும் தனது கணவரோடு சேர்ந்து ஹேர் ஆயில் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். ‘நயன்தாரா, சமந்தாவுக்குப் போட்டியாக களம் இறங்கியது எல்லாம் சரி...ஆனால், ஆயில் ரேட் மட்டும் பார்த்துக் குடுங்க’ என்றும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்!

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்...

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in