பாஜக முன்னாள் துணை முதல்வர் வீட்டின் முன்பு பெண்ணிடம் வழிப்பறி... வைரலாகும் வீடியோ!

நகைபறிப்பு
நகைபறிப்பு

கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா வீட்டின் அருகே வழிப்பறிக் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.எஸ்.ஈஸ்வரப்பா
கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவருமாக திகழ்பவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. கர்நாடகா மாநில பாஜக தலைமைக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வரும் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஷிவமொகா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வரான பிஎஸ்.எடியூரப்பாவின் மகனும் தற்போதைய எம்பியுமான பி.ஒய்.ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் கர்நாடகா பாஜகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கே.எஸ்.ஈஸ்வரப்பா வீட்டு வாசலில் இன்று அதிகாலை, பெண்ணிடம் நடந்த வழிப்பறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொகா நகரில் மல்லேஸ்வர் நகரில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வழியே சென்ற இரண்டு பெண்களிடம், பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் முகவரி கேட்பது போல நிறுத்தி பேசுகின்றனர். அவர்கள் முகவரியைச் சொல்லி விட்டுச் செல்கின்றனர்.

அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர், பெண்ணின் நகையைப் பறித்துக் கொண்டு தயாராக இருந்த நண்பனின் பைக்கில் தப்பிச் சென்று விடுகிறார். நகையைப் பறிகொடுத்த பெண், அந்த பைக் பின்பு ஓடும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணிடம் இருந்து 30 கிராம் தாலிச்சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா வீட்டு வாசலில் நடந்த கொள்ளைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in