குவைத்தில் கணவர் மாயம்... கண்ணீருடன் கலெக்டரிடம் முறையிட்ட மனைவி!

குவைத்தில் மாயமான அப்துல் ஜபார்
குவைத்தில் மாயமான அப்துல் ஜபார்

குவைத் நாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்த கணவர் மாயமான நிலையில், அவரை மீட்டு, தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி நர்கீஸ் பானு. இவர்களுக்கு 12 வயதில் மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண் குழந்தையும், 10 மற்றும் 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக, அப்துல் ஜபார் குவைத் நாட்டிற்கு ஓட்டுநராக பணிபுரிய கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி சென்றுள்ளார்.

கணவரை தாயகம் அழைத்து வரக்கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மனு
கணவரை தாயகம் அழைத்து வரக்கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மனு

இந்த நிலையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அப்துல் ஜபார் தனது மனைவி நர்கீஸ் பானுவிடம், வேலை செய்யும் இடத்தில் அரேபியர் மிகுந்த கொடுமைகளை செய்வதாக கூறி போனில் வருந்தியுள்ளார். சரியான தூக்கம், சாப்பாடு இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை எப்படியாவது இந்தியாவிற்கு அழைத்த கொள்ளுமாறும், உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் உடனடியாக ஊருக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது மனைவியிடம் சொல்லி இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் வலியுறுத்தல்
மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் வலியுறுத்தல்

அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக அவரை போனில் தொடர்பு கூட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்கீஸ் பானு, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்க வந்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அங்குள்ள புகார் பெட்டியில் அவரது புகார் மனுவை செலுத்துமாறு அங்கிருந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் கண்ணீருடன் அந்த பெட்டியில் மனுவை அளித்தார். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடமும், நர்கீஸ் பானு மற்றும் அவர்களது உறவினர்கள் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அப்போது உறுதியளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நர்கீஸ் பானு, ”எனது கணவர் சிறையில் உள்ளாரா அல்லது வீட்டில் அடைத்து வைத்து அவரை கொடுமைப்படுத்தி வருகின்றனரா என்று தெரியவில்லை. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்த காரைக்கால் நவீன் ஏஜென்சிஸ் மூலமாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே இந்திய தூதரகம் மூலமாக எனது கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in