கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா?... தமிழக சிறைத்துறை விளக்கம்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்சவுக்கு சங்கர் மீது 4 அவதூறு வழக்குகளை தொடர்ந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவை சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை. மனித உரிமைகளை பேணுவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தமிழக சிறைத்துறை விளக்கமளித்துள்ளது.

பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கண்ணை கட்டி பிளாஸ்டிக் பைப்பால் சிறைக் காவலர்கள் தாக்கியதாகவும் அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது இந்த குற்றச்சாட்டிற்கு தமிழக சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சிறை
சிறை

இது குறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமூக ஊடகங்களில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் என்ற விசாரணை சிறைவாசி சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களாலோ அல்லது மற்ற சிறைவாசிகளாலோ தாக்கப்படவில்லை.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சிறைவாசிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பேணுவதிலும் சிறை விதிகளை கடைபிடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது’ என தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in