பாதுகாப்புப் படையினருடன் மோதல்: ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் உள்ள ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்களின் அடையாளங்கள் இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக காஷ்மீர் மண்டல காவல் துறை எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் விவரங்கள் வெளிவரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள ரெட்வானி பயீன் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் பூஞ்ச் தாக்குதலில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. கடந்த 4ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஒரு கான்வாய் மீது தாக்குதல் நடத்தியதில் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் சேதமடைந்த ராணுவ வாகனம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் சேதமடைந்த ராணுவ வாகனம்

மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த பகுதி சுரன்கோட்டின் சனாய் டாப் மற்றும் மெந்தரின் குர்சாய் பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது. இச்சூழலில் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஜம்மு - காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in