கைது செய்யப்பட்ட  சேட்டன்ராம், தினேஷ்குமார்.
கைது செய்யப்பட்ட சேட்டன்ராம், தினேஷ்குமார்.

ஆவடி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகைக் கொள்ளை... ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது!

Published on

ஆவடியில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். கடந்த 15-ம் தேதி இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டிப் போட்டு விட்டு கடையில் இருந்த 1.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகை,5 லட்சம் ரூபாய் பணம், ‌ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 8 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, பெங்களூரு , ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், சேட்டன்ராம் என்பதும், சென்னையில் சென்னையில் தங்கியிருந்த இவர்கள் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் இருவரிடம் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

x
காமதேனு
kamadenu.hindutamil.in