தும்கூரில் துப்பாக்கியால் சுட்டு பணம் பறிக்க முயற்சி... ஜார்க்கண்ட்டை சேர்ந்த இருவர் கைது!

துப்பாக்கிகளுடன் பிடிபட்ட கொள்ளையர்கள்.
துப்பாக்கிகளுடன் பிடிபட்ட கொள்ளையர்கள்.

கர்நாடகாவில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டு பணம் பறிக்க முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தும்கூர்
தும்கூர்

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகா ஊர்கேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கண்ணா. இவருக்கு பண்ணை வீடு உள்ளது. கடந்த 26-ம் தேதி மதியம் 3 மணியளவில் இவரது பண்ணை வீட்டுக்கு இருவர் வந்துள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கங்கண்ணாவிடம் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் எடுத்து வர அடுப்பறைக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த அந்த இருவரும், பீரோவில் இருந்த பணத்தை திருட முயன்றனர். இதைப் பார்த்த கங்கண்ணா அவர்களைப் பிடிக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், கங்கண்ணாவை தாக்கினர். அப்போது ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கங்கண்ணாவை சுட்டார். இதனால் கங்கண்ணா அலறவும், கொள்ளையடிக்க வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, காலில் துப்பாக்கியால் சுட்டப்பட்டு கங்கண்ணா துடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குனிகல் போலீஸார், கங்கண்ணாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளையடிக்க முயன்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கங்கண்ணா பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எஜாஸ் மிர்தாஹா (30), சாஹிபுல் அன்சாரி (30) ஆகிய இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், செல்போன், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in