கழுதைகள் மீட்பு
கழுதைகள் மீட்பு

தமிழகத்தில் திருடு போன கழுதைகள்: ஆந்திராவில் இருந்து மீட்டு வந்த போலீஸார்!

இறைச்சிக்காக திருடிச் சென்ற ஆந்திர கும்பலிடம் இருந்து தமிழக போலீஸார் 5 கழுதைகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் சரவணன், அருன், ராஜா ஆகியோர் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். சலவைத் தொழிலுக்கு உதவியாக 6 கழுதைகளை மூன்று பேரும் வளர்த்து வந்தனர். கடந்த 3-ம் தேதி வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கழுதைகளும் காணாமல் போயின.

இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போன கழுதைகளைத் தேடி வந்தனர். கழுதையின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன், என்பவருக்கு அப்போது சிறு பொறி தட்டியது. இறைச்சிக்காக கழுதைகளைக் கடத்தும் கும்பல் ஆந்திரா மாநிலம் சிராலா என்ற ஊரில் உள்ளதாகவும், ஒருவேளை அவர்கள் தங்கள் கழுதைகளைக் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு 3 பேரும் தேடிச் சென்றனர்.

கழுதைகள் மீட்பு
கழுதைகள் மீட்பு

இவர்கள் வளர்த்து வந்த 6 கழுதைகளில் 5 கழுதைகள் அங்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பின்னர், அந்த சங்கத்தை சேர்ந்தோர் பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து, ஆந்திரா கிராமத்திற்கு விரைந்து சென்ற பேரணாம்பட்டு போலீஸார். அங்கு இருந்த ஐந்து கழுதைகளை மீட்டனர். மேலும், அந்த கடத்தல் கும்பல் ஒரு கழுதையை கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் ஆந்திரா மாநிலம் சிராலா போலீஸார் உதவியுடன் ஐந்து கழுதைகளையும் மீட்டு பேரணாம்பட்டில் உள்ள உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். சலவைத் தொழில் செய்யும் தொழிலாளியின் கழுதைகளை மீட்டுக் கொடுத்த பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். திருடு போன கழுதைகளை ஆந்திர மாநிலத்தில் மீட்டுக் கொடுத்த பேர்ணாம்பட்டு போலீஸாரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in