மாட்டுச்சாணத்தை கஞ்சா எனக்கூறி விற்று மோசடி... 4 பேரைக் கைது செய்தது போலீஸ்!

கஞ்சா விற்ற 4 பேர் கைது
கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்தவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பிற போதைப் பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுகின்றனர்.

திருப்பூர் மத்திய காவல் நிலையம்
திருப்பூர் மத்திய காவல் நிலையம்

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் மங்களம் சாலையில் நேற்று திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கஞ்சா பொட்டலம் போன்று இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், மங்களம் சாலையில் 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், ஆனால் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகம் அடைந்ததாகவும் கூறியுள்ளனர். பொட்டலத்தை பிரித்துப் பார்த்தபோது, அது மாட்டுச் சாணம், வைக்கோல் கலந்த கஞ்சா என்பது தெரிய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா (கோப்பு படம்)
கஞ்சா (கோப்பு படம்)

தாங்கள் மோசம் செய்யப்பட்டது தெரியவந்ததால் அதனை திரும்ப கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட நால்வர் மீதும் இன்று வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீஸார், நால்வரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ததுடன் மட்டுமல்லாது அதில் மாட்டுச் சாணத்தை கலந்து மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in