ரூ.20 கோடி கடன் பெற்றுத்தருவதாக ஆசைகாட்டி ரூ.32 லட்சம் அபேஸ்... முன்னாள் பிஎஸ்எப் வீரரிடம் நூதன மோசடி!

முன்னாள் பிஎஸ்எஃப் வீரர் ஜெயகோபி
முன்னாள் பிஎஸ்எஃப் வீரர் ஜெயகோபி

20 கோடி‌ ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் 32 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. முதியோர் இல்லம் தொடங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்தது கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபி(60). இவர் கடந்த 32 வருடங்களாக எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்‌. இவர், தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் வாட்டர் பியூரிபையர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இவரது தாயார் 100 வயதில் காலமான நிலையில், தன் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது தாய் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அவர் பெயரில் முதியோர் இல்லம் கட்டுவதற்கு திட்டமிட்டார். பின்னர் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு முதியோர் இல்லம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

டெபாசிட்
டெபாசிட்

முதியோர் இல்லத்தில் சேரும் முதியவர்களை முறையாக பராமரிக்க கூடுதல் பணம் தேவைப்பட்டதால், சமூக வலைதளங்களில் முதியோர் இல்லத்திற்கு உதவி செய்யுமாறு விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை தொடர்பு கொண்டு அவருடைய அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும் தங்களிடம் தற்போது 1000 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், உங்களது அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி தருவதாகவும் நம்ப வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அறக்கட்டளையின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கலாந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்..

அப்போது அந்த கும்பல் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோவையும் காண்பித்ததை நம்பி ஜெயகோபி டாக்குமெண்ட் செலவுக்காக 13 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தினார். மேலும், அவர்கள் தங்கிய தனியார் நட்சத்திர விடுதி செலவு, விமான செலவு என அனைத்தையும் செலுத்தினார். இதனை தொடர்ந்து மொத்தமாக 32 லட்ச ரூபாயை பறித்து கொண்டு கொள்ளை கும்பல் தலைமறைவானது.

நகை அடகு கடையில் மோசடி
நகை அடகு கடையில் மோசடி

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து ரூம் முழுவதும் பணம் இருப்பது போன்று செட்டிங் செய்து, அதனை வீடியோ எடுத்து காண்பித்துள்ளனர். மேலும் தங்களிடம்‌ 2000 முதல் 3000 கோடி ரூபாய் வரை பணம் உள்ளது என்றும் இதனை கையில் தர முடியாது அறக்கட்டளை மூலமாக நாங்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல அறக்கட்டளைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் ட்ரான்ஸ்பர் செய்ததற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளனர். இதில், முக்கியமாக சென்னை சேர்ந்த சத்யா, திருச்சியை சேர்ந்த சரவணன், நாகராஜன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய நான்கு பேர் திட்டம் போட்டு ஏமாற்றியுள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் அவர் கூறியது போல் பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெய் கோபி, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in