தங்கை மரணத்திற்கு காரணமான காதலன்... வெறி தீர வெட்டிக் கொன்ற அண்ணன்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் தங்கை மரணத்திற்கு காரணமான காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து பழிதீர்த்த அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் லட்சுமி அவென்யூ பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் அவினாஷ் என்கின்ற இமானுவேல் (19). இவர் தனது நண்பர் தீபன் சக்ரவர்த்தி, ஜோஸ்வா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் புழல் ஜெய் பாலாஜி நகர் ஒத்தைவாடை தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த நான்கு பேரிடம் சென்று அவினாஷ் என்னை கொலை செய்ய போறீயா? என கேட்டு கத்தியை காட்டி மிரட்டியதுடன் ஒருவரை வெட்ட முயன்றுள்ளார். உடனே அந்த கும்பல் அவினாஷிடம் இருந்து கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அவினாஷ் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இக்கொலை சம்பவம் தொடர்பாக புழல் கங்காதரன் தெருவை சேர்ந்த இளம்பருதி (19) சூர்யா (25), கனகா என்கின்ற லோகேஷ் (20), செங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ்( 21) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைதான இளம்பருதிக்கு 17 வயதில் ஒரு தங்கை இருந்துள்ளார். அவருக்கும் அவினாஷூக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவினாஷ் அடிக்கடி காதலி படிக்கும் பள்ளிக்கு சென்று அவரை பார்த்து விட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் அண்ணன் இளம்பரிதிக்கு தெரிய வந்ததை அடுத்து அவர் அவினாஷை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி அவினாஷ் தனது காதலியை பார்க்க சென்ற போது அங்கிருந்த அவரது அண்ணன் இளம்பருதி எதற்காக இங்கு வந்தாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவினாஷை சரமாரியாக வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவினாஷ் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இளம் பருதி உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான இளம்பருதியின் தந்தை தனது மகளை செங்குன்றம் அடுத்து காரனோடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து தினமும் புழல் பள்ளிக்கு சென்று வந்த அந்த பெண், கடந்த மாதம் பள்ளி முடிந்து தனது தந்தையுடன் பைக்கில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த விபத்தில் காயமடைந்த பெண்ணின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கொலை செய்யப்பட்ட அவினாஷ்
கொலை செய்யப்பட்ட அவினாஷ்

பின்னர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த இளம்பருதி தனது தங்கை சாவுக்கு காரணமான அவினாஷை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் நேற்று மாலை அவினாஷே, புழல் ஒத்தவாடை தெரு அருகே உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்த இளம்பருதியிடம் நேரில் சென்று கத்தியை காட்டி மிரட்டிய போது,. ஏற்கெனவே பழி வாங்கும் எண்ணத்தில் இருந்த இளம்பருதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவினாஷ் கையில் இருந்த கத்தியை‌ பிடுங்கி அதே மைதானத்தில் வைத்து அவரை வெட்டி கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் கைதான 4 பேரிடம் தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in