தடபுடல் விருந்து வைத்து மாமியாரை ’அனுப்பி’ வைத்த மருமகள்!

தடபுடல் விருந்து வைத்து மாமியாரை ’அனுப்பி’ வைத்த மருமகள்!

பெங்களூருவில் இளைஞருடன் தகாத உறவில் இருந்த மருமகளை மாமியார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மருமகள், காதலனுடன் சேர்ந்து மாமியாரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை அடுத்த பத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி ராஷ்மி. மஞ்சுநாத் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ந் தேதி மஞ்சுநாத்தின் தாயார் லட்சுமிம்மா திடீரென இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அப்போது சொல்லப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பத்தரஹள்ளி காவல் நிலையத்தில், தனது தாயார் மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் அளித்துள்ளார் மஞ்சுநாத்.

அவர் தனது புகாரில், தனது தாயார் இறப்பில் தனது மனைவி மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அவரது மனைவி ராஷ்மியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ராஷ்மி அளித்த வாக்குமூலத்தில், “எங்கள் வீட்டின் மாடியில் இருக்கும் அக்‌ஷய் என்ற இளைஞருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதையொட்டி அக்‌ஷய்க்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்தேன். இதைக் கண்டுப்பிடித்துவிட்ட மாமியார் என்னுடன் சண்டையிட்டார். மகனிடம் விஷயத்தைக் கூறி விடுவதாகவும் மிரட்டினார்.

இதனால், அக்‌ஷயும் நானும் சேர்ந்து மாமியரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி சம்பவத்தன்று மாமியாருக்கு பிடித்த உணவுகளை சமைத்து அதில் அதிகளவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்தேன். அதைச் சாப்பிட்டுவிட்டு அவர் மயங்கிய சமயத்தில் அக்‌ஷய் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தான். அவரது சாவை இயற்கையானதாக காட்டவேண்டும் என்பதற்காக, திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கணவரையும் மற்றவர்களையும் நம்ப வைத்தோம்” என தெரிவித்துள்ளார்.

ஆண் நண்பருடன் இணைந்து மாமியரை மருமகளே தீர்த்துக்கட்டிய சம்பவம் பெங்களரூவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in