பாஜக எம்.பி பிரிஜ் பூஷணுக்கு ஷாக்... பாலியல் புகாருக்கு ஆதாரம் உள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு!

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் பதிவாகி உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

பாஜக எம்.பி பிரிஜ் பூஷன்
பாஜக எம்.பி பிரிஜ் பூஷன்

பிரிஜ் பூஷண் மீதான 5 வழக்குகளில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354 , 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 354D பிரிவின் கீழும் கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பிரிஜ் பூஷனின் செயலாளர் வினோத் தோமர் மீதும் பிரிவு 506ன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி உத்தரவு
நீதிபதி உத்தரவு

உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்.பி.யாக இருக்கும் பிரிஜ் பூஷணை இம்முறை பாஜக வேட்பாளராக நிறுத்தவில்லை. அதற்குப் பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங்கை வேட்பாளராக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in