பேராசிரியரை மிரட்ட கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு... 4 மாணவர்கள் கைது!

கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி பேராசிரியரை மிரட்டுவதற்காக பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள் நான்கு பேர், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

தரையில்  பெட்ரோல் குண்டு எச்சங்கள்
தரையில் பெட்ரோல் குண்டு எச்சங்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது தேவையின்றி அங்கு நடமாடிய ஒரு மாணவரை, முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரிப் பேராசிரியருமான முகிலன், இருக்கையில் சென்று அமருமாறு கூறியுள்ளார். 

ஆனால், அந்த மாணவர் அமர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரை முகிலன் கண்டித்துள்ளார். அதையடுத்து கோபத்துடன் அங்கிருந்து வெளியே சென்ற மாணவர் மது அருந்திவிட்டு திரும்பி வந்து பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் அந்த மாணவரை கண்டித்த நிலையில், அவருடைய அடையாள அட்டையையும் வாங்கி வைத்துக்கொண்டார். 

தனியார் கல்லூரி
தனியார் கல்லூரி

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் அன்று இரவு தனது சக நண்பர்கள் 3 பேருடன் வந்து கல்லூரி நுழைவுவாயில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.  கல்லூரி சுவற்றில் பட்டு வெடித்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீஸார் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் பொன்.பெரியசாமி அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து  போலீஸார் விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள்  அதே கல்லூரி மாணவர்கள் தான் என்பது உறுதியானது. அதையடுத்து மாணவர்கள் பவித்ரன் மற்றும் அவருடைய நண்பர்கள் கபிலன், பிரதீஷ், ஜீவா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...  


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in