'உனக்கு யார் பொண்ணு தருவா?'... குடிகார மகனைக் கண்டித்த தாய்: கட்டையால் அடித்துக் கொலை!

கைது செய்யப்பட்ட அனில், கொலை செய்யப்பட்ட ஷோபா.
கைது செய்யப்பட்ட அனில், கொலை செய்யப்பட்ட ஷோபா.

வேலைக்குப் போகாமல் மது குடித்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்த இளைஞர், தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற கோபத்தில் தாயைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலபுர்கி
கலபுர்கி

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவடட்ம், சிஞ்சோலி தாலுகா பூச்சாவரத்தைச் சேர்ந்தவர் ஷோபா(45). இவரது மகன் அனில்(25). இவர் வேலைக்குப் போகாமல் வீணாக ஊர் சுற்றி வந்துள்ளார். அத்துடன் மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது தாய் ஷோபாவிடம், அனில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

கொலை
கொலை

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இதே பிரச்சினை இவர்கள் குடும்பத்தில் ஏற்படடுள்ளது. திருமணம் செய்து வைக்க உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என்று தனது தாய் ஷோபாவிடம் அனில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், வேலைக்குச் செல்லாத உனக்கு எப்படி பெண் பார்ப்பது என அவரது தாய் ஷோபா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது போதையில் இருந்த அனில், அவரது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரத்தில் வீட்டின் அருகே கிடந்த கட்டையை எடுத்து ஷோபாவை சரமாரியாக அனில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஷோபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த குஞ்சாவரம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த ஷோபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், அவரை அடித்துக் கொலை செய்த அனிலை கைது செய்தனர்.

குடிபோதையில் தனது தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in