சென்னையில் அதிர்ச்சி... பட்டப்பகலில் ரவுடி ஓடஓட வெட்டிக்கொலை; பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!

கொலையான சரத்குமார்
கொலையான சரத்குமார்

சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த கொலையை பார்த்த பொதுமக்கள் பதறி அடித்து ஓட்டம்பிடித்தனர்.

சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் ரவுடி சரத்குமார்(28). சரித்திர பதிவேடு குற்றவாளியான சரத், இன்று மதியம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார் .

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதில் சுதாரித்துக் கொண்ட சரத் அங்கிருந்து அங்கிருந்து தப்பி ஓடிய போது, அந்த கும்பல் விடாது துரத்திச் சென்று ரவுடி சரத்தை ஓட ஓட பட்டாக்கத்தியால் தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

கொலை
கொலை

பட்டப்பகலில் கூட்ட நெரிசல் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த ராஜமங்கலம் போலீஸார் சரத் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சரத்குமார்
சரத்குமார்

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019 ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை‌ செய்யப்பட்ட வழக்கில் சரத்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக சரத் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் கொலை நடந்ததா என பலக் கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in